Showing posts with label புத்தாண்டு உழவன் துயரம் தீரஅவலம் கவிதை. Show all posts
Showing posts with label புத்தாண்டு உழவன் துயரம் தீரஅவலம் கவிதை. Show all posts

Sunday, January 1, 2017

பாங்காக இட்டபயிர் கருகிப் போக-தினம் பாடுபட்ட விவசாயி உள்ளம் வேக!


பாங்காக இட்டபயிர் கருகிப் போக-தினம்
பாடுபட்ட விவசாயி உள்ளம் வேக
தாங்கொணா துயரத்தால் இரண்டே நாளில்-அந்தோ
தன்னுயிரைத் பதினெட்டு பேரும் தந்தார்
ஆங்கிலப் புத்தாண்டே அடுக்கும் செயலா-உந்தன்
ஆரம்பம் இதுவானால் வாழ்வே புயலா
தீங்கின்றி நீசெல்ல தூண்டு கின்றோம்-காக்க
தெய்வத்தை மறவாது வேண்டு கின்றோம்!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...