Showing posts with label புத்தாண்டு தமிழர் பொங்கல்கொண்டாட்டம் கவிதை புனைவு. Show all posts
Showing posts with label புத்தாண்டு தமிழர் பொங்கல்கொண்டாட்டம் கவிதை புனைவு. Show all posts

Tuesday, January 14, 2014

கொல்லும் பசிப்பிணி போக்கும்-உழவன் குறையென்ன கண்டதை நீக்கும்!



தைமுதலே புத்தாண்டாம் தமிழர்கென்றே -என
தமிழரிஞர் பலர்கூடி வைத்தாரன்றே
மெய்யதுவே ! உணர்ந்தனை ஏற்றார்நன்றே- இம்
மேதினியில் பொங்கலுடன் இணைத்தாரொன்றே

(சந்தம் வேறு)

புதுப்பானை பொலிவுற வைத்தே-நல்
பூவொடு மஞ்சளின் கொத்தே!
மதிப்பாக மாலையாய் கட்டி-அந்த
மண்பானை கழுத்தினில் சூட்டி!

புத்தம் புதுநெல்லைக் குத்தி-வெல்லம்
போட்டுடன் பால்பொங்கக் கத்தி!
சத்தமும் பொங்கலோ என்றே-தர
சங்கீத இனிமையை நன்றே!

மாடென உழைத்திட்ட உழவன்-பொங்கல்
மாட்டுக்கும் வைத்ததைத் தொழுவன்
காடொனக் கிடந்திட்ட நிலமும் -அவன்
கைபட பெற்றதாம் வளமும்!

கொல்லும் பசிப்பிணி போக்கும்-உழவன்
குறையென்ன கண்டதை நீக்கும்!
ஒல்லும் வகையவன் வாழ -அரசு
உடனடி எண்ணுமா சூழ !

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...