நாம் செய்த தீவினைகள்
நம்மோடிருக்க, பிறர் நமக்கு செய்யும் தீவினைகள் நம்மை வருத்தும் போது, நாம் தெய்வத்தை நோவதால் எந்த பயனும் விளையாது! துன்பப் பட்டுத்தான் தீர
வேண்டும்! வேறு வழியில்லை! எதுபோல என்றால் , ஒன்றுமே இல்லாத ( காலியான) பானையை அடுப்பில்
வைத்து எரித்தால் பொங்கி வருமா !? வராது. அதுபோல!
ஆற்றில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.கரையோரம்
கொக்கு, ஒன்று வாடிய
பயிர் போல, அமர்ந்து கொண்டிருக்கிறது நீரில் மீன்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கின்றன
என்றாலும். கொக்கானது தான் விரும்பும் மீன் வரும் வரை காத்துக்கொண்டிருப்பதைப் போல, நாமும் ,நமக்கு உரிய வாய்ப்பு வரும் வரை காத்திருக்க
வோண்டும்
சிறப்பான வழிபாடு,
ஆறுகால பூசை, வேண்டுதல், படையல் அன்னதானம், எனப் பல்வேறு வகையில் ஆண்டவனை வழிபாடு செய்கிறோமே, அதுகூட நடைபெறாமல் போய்விடும்! வானம்(மழை) பெய்யாமல் ,பொய்த்து விட்டால்!
பொருளற்ற,
பரம ஏழைகளை அழிக்கக் கூடிய, கொடிய ,பசியாகிய நோயினைப் போக்குவதுதான் ,மிகுதியான பொருளைப் சேர்த்த ,ஒருவன் அப்பொருளைப் பாதுகாப்பாக வைக்கும் இடமாகும்! அதாவது ஏழைகளின் அழிபசி
மிக்க வயிறுதான் வங்கியாகும், பாதுகாப்புப் பெட்டகமாகும் என்பதே வள்ளுவர் கருத்தாகும்!
புலவர் சா இராமாநுசம்

