Monday, September 18, 2017

முகநூல் பதிவுகள்

இராசவின் படுதோல்விக்கிப் பிறகாவது , பா ஜ க அரசு தமிழக
மக்களின் மன்போக்கை அறிந்து
தன்னை ,தன் போக்கை மாற்றி தமிழகத்திற்கு நல்லது
செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்குமா!?

உறவுகளே
நாள் தோறும் காலண்டரில் ஒரு தாளைக் கிழிக்கிறோம் யாரேனும் நினைத்துப் பார்ப்பதுண்டா
அது நம் வாழ்நாளில் ஒரு நாளைக் கிழிக்கிறோம்
எனபதை!

திட்டமிட்டு திறமையோடு எந்த
ஒரு செயலையும் செய்பவர்கள்
தாம் எண்ணியதை எண்ணியவாறே அச் செயலில்
வெற்றி பெறுவர் என்பதில் ஐயமில்லை என்பதாம்

நல்லவனா கெட்டவனா என சரிவர ஆராயாமல் ஒருவனிடம் வைக்கும் நம்பிக்கையும் , நன்கு ஆராய்ந்து நல்லவன் நம்பிக்கைகு உரியவன் என்று
அறிந்த பின்பும் அவன்பால் , ஐயம் கொள்வதும் நமக்கு
தீராத துன்பத்தையே தரும்

சமூகநீதியை நிலை நிறுத்த திமுக துணை நிற்கும்: ஆசிரியை சபரிமாலாவுக்கு ஸ்டாலின் வாக்குறுதி
--செய்தி
: முதலில் ,ஆசிரியை சபரிமாலாவுக்கு ஸ்டாலின் அ்வர்கள் தன கட்சிக்காரகள் நடத்தும் ஏதேனும் ஒரு
பள்ளியில் வேலை வாங்கித் தரட்டும்! செய்வாரா?

ஒரு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ள
இந்த காலத்தில் அனிதா தற்கொலையால் தான் செய்த
அதும் அரசுப் பள்ளி ஆசிரியை வேலையை நீட் தேர்வுக்கு எதிர்புத் தெரிவித்து இராசினாமா செய்தது
பாராட்டத் தக்கது என்றாலும் ஏற்கத் தக்கதல்ல! இன்று
ஏதோ ஒரு ஆவேசத்தில் அவர் இப்படி செய்து விட்டார்
ஆனால் காலப்போக்கில் பொருளாதார சிக்கல் வரும்போது தொல்லை படுவார் இன்று பாராட்டும் எவரும் உதவமாட்டார் !அவர் வேறு வமையில் தன் எதிர்ப்பைக்காட்டி இருக்கலாம்


புலவர்  சா  இராமாநுசம் 

9 comments :

 1. #ஏதேனும் ஒரு பள்ளியில் வேலை வாங்கித் தரட்டும்! செய்வாரா?#
  நல்ல யோசனை அய்யா :)

  ReplyDelete
  Replies
  1. அப்படியொரு வாய்ப்பு கிடைச்சா சபரிமாலா அதை ஏத்துக்க கூடாது..

   Delete
 2. அனைத்தையும் ரசித்தேன். பெரும்பாலும் முக நூலில் படித்தேன். தம இரண்டாம் வாக்கு.

  ReplyDelete
 3. அனைத்தும் அருமை ஐயா
  உண்மை
  தம +1

  ReplyDelete
 4. சரியான கேள்விதான் ஐயா
  த.ம.5

  ReplyDelete
 5. இனிமேல் பாஜக என்ன செய்தாலும் தமிழக மக்களின் இடத்தில் இடம் பிடிப்பது என்பது முடியாத காரியம் TM 6

  ReplyDelete
 6. வணக்கம் ஐயா !

  நல்லதோர் கேள்வி தன்னை
  ...நயம்படக் கேட்டீர் ! மாலா
  வெல்லவோர் வழியும் சொன்னீர்
  ...விரைந்ததைக் கொடுப்பார் யாரோ ?
  சொல்லவோர் பதிலும் இல்லாச்
  ...சுயநலம் பிடித்தார் முன்னே
  வல்லதோர் ஆட்சி வந்தால்
  ...வழங்குவார் என்போம் ஐயா !


  தம +1

  ReplyDelete
 7. ஏதோ உத்வேகத்தில் செய்யும் செயல்களின் பாதிப்பு பின்பே உணரப் படுகிறது

  ReplyDelete
 8. சரியான கேள்வி கேட்டுள்ளீர்கள்.

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...