Showing posts with label இருவர் அணியும் இணையா வழியும் புனைவு. Show all posts
Showing posts with label இருவர் அணியும் இணையா வழியும் புனைவு. Show all posts

Wednesday, April 26, 2017

எத்தனை நாட்களோ இணைப்பு நாடகம்-நாளும் எழுதிட முரண்பட செய்திகள் ஊடகம்



எத்தனை நாட்களோ இணைப்பு நாடகம்-நாளும்
எழுதிட முரண்பட செய்திகள் ஊடகம்
பித்தரைப் போல பேசுவர்! பலரும்-ஏனோ
பின்னர் அதனை மாற்றுவர் சிலரும்
சித்தம் கலக்கும் செய்திகள் செப்பிட- சற்றும்
செயல்படா அரசுக்கு நிகரென ஒப்பிட
இத்தரை தன்னில் எதுவுமே  இல்லை-அந்தோ
இறைவா காக்க வந்திடு ஒல்லை!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...