நன்றி
நன்றி தமிழ்மணமே-மீண்டும்
நலமுற வந்தாய் தமிழ்மணமே
நின்றே
விட்டதோ தமிழ்மணமே-என்றே
நினைத்தவர்
மனதில் தமிழ்மணமே
நன்றே
நிம்மதி தமிழ்மணமே-நீயும்
நல்கிட வந்தாய் தமிழ்மணமே
நன்றியை
கவிதையாய் தமிழ்மணமே-இங்கே
நவின்றேன் வாழ்க தமிழ்மணமே
புலவர் சா இராமாநுசம்

