Showing posts with label நாட்டைக்காக்க இறைவன் வர வேண்டல். Show all posts
Showing posts with label நாட்டைக்காக்க இறைவன் வர வேண்டல். Show all posts

Friday, April 28, 2017

ஏக்கமொடு எழுதுகின்றேன் இறைவா நீயும்-மனம் இறங்கிவந்து அருள்புரிய துயரம் மாயும்



ஏக்கமொடு எழுதுகின்றேன் இறைவா நீயும்-மனம்
இறங்கிவந்து அருள்புரிய துயரம் மாயும்
காக்கவொரு அரசில்லை இன்றே இங்கே -மக்கள்
கண்ணீரில் மிதப்பதன்றி வாழ்தல் எங்கே
ஆக்கமின்றி உள்ளதும் அழிந்து போக –நாளும்
அல்லல்பட்டு தீராது உயிரும் சாக
!நோக்கமெலாம் பணம்பதவி ஆட்சி என்றால் –ஆள்வோர்
நோக்குவரோ!? மக்கள்நலன்! இவ்வண்  சென்றால்


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...