Showing posts with label வேண்டுதல். Show all posts
Showing posts with label வேண்டுதல். Show all posts

Sunday, August 6, 2017

தமிழ்மணத்தின் கவனத்திற்கு!



தமிழ்மணத்தின்  கவனத்திற்கு!
        ரேங் பட்டியல் முறையாக இல்லை என் ரேங் ஒருமுறை 12  என்றும்
பிறகு 8 என்றும் வருகிறது! எது? க  உண்மை அறிய  ஆவல் கவனித்து
ஆவன  செய்ய வேண்டுகிறேன்

Tuesday, July 18, 2017

தமிழ்மணமே மீண்டும் பழைய நிலையா!!!?



தமிழ்மணமே  மீண்டும்  பழைய  நிலையா!!!?
      என்னுடய பதிவுகள்  கடந்த இரண்டு  மூன்று  கவிதைகள்
ஏற்றுக்  கொண்டதா க  அறிவித்தும்  முகப்பு  பக்கத்தில் வரவில்லையே
என்ன காரணம்!? தள்ளாத  வயதில் ,துன்பத்தோடு  நான்  எழுதும் பதிவுகள்
முகப்பில்  வர  ஆவன செய்ய  வேண்டுகிறேன்  நிர்வாகம்  கவனிக்குமா
இந்த இடர் பாடு  எனக்கு மட்டுமா???? உறவுகளே உங்களுக்கு  இருந்தால்
தெரிவிக்க  வேண்டு கிறேன்

      புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, July 4, 2017

வலையில் எழுதியே வளர்ந்தோமே !–அதை வளர்த்திடும் பணியில் தளர்ந்தோமே!




வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே,
வாராக் காரணம் தெரியவில்லை!-தாமரை,
இலையில் நீரென வருகின்றார்!- பதிவும்
இருப்பதாய் ஒப்புக்கு தருகின்றார்!- சிலர்
நிலையில் மாற்றம் நன்றல்ல!-காலம்
நிலையில் ! அறிவோம்! இன்றல்ல!-எனினும்,
வலையில் எழுதியே வளர்ந்தோமே !–அதை
வளர்த்திடும் பணியில் தளர்ந்தோமே!




நன்றி மறப்பது நன்றல்ல-நமக்கே
நவின்றது வள்ளுவன் இன்றல்ல!-முகநூல்
சென்றது  ஏதும் தவறல்ல-கருத்தைச்
செப்பிட அதுவும் வேறல்ல!-ஆனால்
நின்றது வலைவழி வருவதுமே-என
நினைத்திட, பதிவிதும் தருவதுமே!-கடன்
என்றதே என்னுள் மனசாட்சி-அதனால்
எழுதினேன்! வந்திடல், மிகமாட்சி!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...