அன்பான
கணவனுக்கும் மனைவிக்கும் அறுபது வயதைத் தாண்டினாலும்
அவர் உள்ளம் இருபது வயது
இளமையோடு தான்
இருக்கும்! ஐயமில்லை! ஆனால்...? இருவரில் ஒருவர் பிரிய நேர்ந்து
விட்டால்..!மற்றவர் வாழ்வு ? அதனால் விளையும்,
சோகம் ! சொல்லும் தரமல்ல!
உண்மையான
காதலுக்குத் தான் எவ்வளவு ஆற்றல்!!!!!? காதல்
முறிந்தால் அறிவும் அழிய பைத்தியமே
பிடிக்கிறது! உடலும் கெடுகிறது!! உணர்வும்
அற்றுப் போகிறது!இறுதியாக இறப்பு
வரை செல்கிறது!
வெகு
தொலைவில் தெரியும் புகையைக் கட்டி ,அங்கே ஏதோ
நெருப்புப் பற்றிக் கொண்டது, என்று
சொன்னால்,பார்த்தவர் யாரும்
நீ போய் நேரில் பார்த்தாயா
?என்று கேட்பதில்லை! அப்படிக் கேட்பவன் அறிவுள்ளவனாக இருக்க முடியாது ! நெருப்பு
, பற்றினால்தானே புகை வரும் என்ற
,யூகித்து அறிய வேண்டிய , பொது
அறிவுகூட இல்லாத அவனைப் போல்
,சிலரை , நாம், நம்
வாழ்கையில் எதிர் கொள்வது ,அதுவும்
அவன் அரசியல் வாதியாக
இருந்து விட்டால்!!!? விளைவு ! சொல்லும் தரமல்ல!
தேனீ
என்பது தேன் இருக்கும் இடம்
எதுவோ ,அங்கே போய்தான்
உட்காரும் எனவே தான் அதனைத்
தேனீ என்று சொல்வர்! ஆனால்
, சாதரண ஈ சாக்கடை மலத்திலும்
உட்காரும் இறைவனுக்கு வைக்கும் பிராசாதத்திலும் உட்காரும் இதுபோலத்தான் ,உலகில் நாம்
காணும் ,பழகும் மனிதர்களில் இருவகைப்
பட்டவர் உள்ளனர் இதனை நாம்தான் அறிந்து நடந்து கொள்ள வேண்டும்
புலவர் சா
இராமாநுசம்