Monday, November 20, 2017

முகநூல் பதிவுகள்



யானை வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே! இது பழமொழி! அதுபோலத் தான் தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு நடக்கிறது ,இதிலே என்ன வியப்பு இருக்கிறது ஒத்திகை தானே

உறவுகளே!
வள்ளுவர் கூட பொய் சொல்ல லாம் என்று சொல்கிறாரே! உண்மைதான்! ஆனால், எப்பொழுது
என்றால், ஒருவன் தான் சொல்லும் பொய்யானது யாருக்கும் தீமை தராதவகையில் பெரும் நன்மையை தரும் என்றால் தவறல்ல! என்பதே மேலும் அதாவது உண்மை ஆகாது,!ஆனால் அதனை உண்மையின் இடத்தில் வைத்து ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்

ராஜீவ் கொலைவழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரே கருணை காட்டுமாறு
சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தை ,கண்டு மனித நேயத்தோடு,சோனியா அவ ர்கள் மன்னிக் வேண்டுகிறோம்

உறவுகளே
தேசபிதா என்று மக்களால் போற்றப் பட்ட அண்ணல் மகாத்மா காந்தி அவர்களைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டுவதாக, வந்துள்ள செய்தி உண்மை என்றால், இந்த நாடு
எங்கே போகிறது! ஆளும் மத்திய அரசு இதனை
தடுத்து நிறுத்த வேண்டாமா!!!!?

ஆளுநரின் செயல் வரம்பு மீறியதாக இருந்தாலும் ஆளும்
அரசோ அமைதியாக இருப்பதும், அமைச்சரே ஒருவர் அதில் கலந்து கொள்வதும் சனநாயகத்தில் கேலிக் கூத்தாகும் ! இது, மத்திய அரசுக்கு அழகல்ல! இதைவிட ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்துவது நன்று

ஒருவன் சூழ்நிலையின் காரணமாக படிக்க முடியாமல் போனாலும்
நன்கு கற்றவர்களால் சொல்லப்படும் செய்திகளைக் கேட்டு , அறிவு
பெறுவதே போதுமானதாகும்! அதுவே தளர்ச்சி யுற்ற காலத்தில் ஊன்றுகோல் போல அவனுக்குப் பயன் படும் என்பதாம்!

உறவுகளே!
திருப்பதிக்குச் சென்று மொட்டையைக் கண்டாயா
என்று கேட்பதற்கும், செயலலிதாவின் மர்ம மரணத்தை விசாரிக்க நீதிபதி ஒருவரை நியமித்து இருப்பதற்கும் பலன் என்னமோ ஒன்றுதான்!

புலவர் சா  இராமாநுசம்

11 comments :

  1. சிலவற்றை அங்கே படித்த நினைவு இருக்கிறது!

    ReplyDelete
  2. ஆளுனர் ஆட்சி வந்தால் நல்லதுதான்

    ReplyDelete
  3. நிலைமை நாளும் பொழுதும் கேவலமாக போகிறது ஐயா.
    த.ம.பிறகு.

    ReplyDelete
  4. ஒன்று புரிபடமாட்டேங்குது ஐயா தினம் ஒரு கூத்தாய் இருக்கு மூன்று குரங்குகளின் நிலையை பின்பற்றுவது போல் இருக்கு நிலைமை எல்லா பக்கமும்

    ReplyDelete
  5. முகநூலில் படிக்காதவற்றை இங்கே படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி ஐயா.

    அரசியல் மோசமாகிக் கொண்டே போகிறது நிலை....

    ReplyDelete
  6. இதுவும் கடந்துபோகும் ஐயா
    தம+1

    ReplyDelete
  7. நமக்கு எல்லாமே பழகிப்போனதுதானே ஐயா.

    ReplyDelete
  8. படித்தேன் அய்யா.........

    ReplyDelete
  9. ஒவ்வொரு விதப் புரிதல்

    ReplyDelete
  10. இன்றுதான் ஏற்றுக்கொண்டது த.ம. 9

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...