அன்பின்
இனிய வலையுலக உறவுகளே!
வணக்கம் கணகில!
வயதால் மட்டுமே மூத்த வலைப்பதிவராகிய நான் உங்கள் பார்வைக்கு
பணிவன்போடு
வைக்கும் ஒருசில கருத்துகள்!
இன்றைய
வலையுலகம் ஆரோக்கியமாக இயங்கவில்லை என்பது , என்
கருத்து!
இனம் காணமுடியாத ஒருவகைப் போட்டி ,மனப்பான்மை
உள்ளுக்குள் உருவாகி வருகிறது! இதனைக் கூர்ந்து
பார்தால் உண்மை தெரியும் மேலும் அதிகம் விளக்கினால் அதுவே தீமை தரலாம்
ஆனால்
ஒன்றை இங்கே அழுத்தமாக செல்வதெனில் அதற்கு!!!!!!!
காரணம் தமிழ்மணத்தில் வைக்கப் பட்டுள்ள ரேங்குப்
பட்டியலும்
மதிப்பெண் பட்டையும்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது
என்னுடைய ரேங் பனிரெண்டில் இருந்த போதும் நான்
கவலைப் பட்டதில்லை இன்று நான்கில் இருப்பது
கண்டு மகிழவும் இல்லை
அது மட்டுமல்ல,!வலைப்பதி ஆனாலும் ,முகநூல் ஆனாலும்
என்
கருத்துகளை
எழுதுவதில் மட்டுமே நான் கருத்தாக இருப்பேன்
இன்று
வலைப்பதிவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்
சுருங்கி
விட்டது என்பது பலரும் அறிந்த உண்மை!
உள்ள சிலரும் விலகி செல்லாமல் இருக்க வழிகாண
வேண்டும்
சிந்திப்போம் செயல்படுத்துவோம்!
உங்கள்
கருதென்ன!!!?
புலவர் சா இராமாநுசம்

