திரளான மாணவரின் பெருங்கூட்டம் தானே திரட்டாத தன்னெழிச்சி வரநாட்டம் காணே வரலாறு காணாத போராட்டம் கண்டீர் வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர் தரமான அறவழியே போராட்டம் போக தம்நிகரும் இல்லையென அமைதிமிக ஆக சரமாக மேன்மேலும் கூடுகின்றார் இங்கே சரிசெய்ய முயலாத அரசுகளும் எங்கே?
ஏசுவே மீண்டும் வாரும் இங்குள்ள நிலையைப் பாரும் பேசுவ அனைத்தும் பொய்யே பிழைப்பென! காண்பீர் மெய்யே! கூசுவ அரசியல் போக்கே! குறைகண்டே விரைந்தே நீக்க! தூசிவ! துடைக்க வாரும்! துயர்போக எம்மைக் காரும்!
கருணையின் வடிவம் நீயாய் காப்பதில் அன்புப் தாயாய்
பெருமையும் பெற்றவர் ஆக, பேசுதல் நிலையாய்ப் போக! உருவமே பெற்று வருவீர் உலகினைக் காத்தே அருள்வீர்! தருணமே இதுதான்! ஆகும்! தவறிடின் ! அழிந்து போகும்!